கேகாலை மாவட்டத்திற்கு இன்று(30) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லிலீற்றக்கு அதிகமாக மழைவீழ்ச்சி காணப்பட்டதினால் மேலும் மழை தொடருமாயின் மண்சரிவு , பாறை விழுகை , நிலவெட்டு சாய்வு, மற்றும் தரை உள்ளிறக்கம் என்பவற்றின் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும் தயார் நிலையில் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
கேகாலை அரனாயக்க பிரதேச செயலக பிரிவு சுற்றுப் புறங்கள் மற்றும் புளத்ஹேபிட்டடிய பிரதேச செயலக பிரிவு சுற்றுப் புறங்களிலும் இன்று(30) நள்ளிரவு முதல் நாளை (31) நள்ளிரவு வரையில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(rizmira)