கேகாலை மாவட்டத்தை சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய மாவட்டமாக மேம்படுத்துவதற்கான திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் உத்தேச நகரத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமாக கலிகமுவ – அட்டாளைத் தோட்டத்தில் இந்த நகரம் அமைக்கப்படவுள்ளது.
முதல் கட்டத்தின் கீழ் இரண்டு கோடியே 50 இலட்ச ரூபா இதற்காக செலவிடப்படவுள்ளதுடன், தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திக்கான சந்தை வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.