கேக் வெட்டி கொண்டாடிய கோட்டாபய [PHOTO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதை தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நேற்று மாலை வெளியான இந்த தீர்ப்பை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தடை நீங்கியுள்ளது.

இந்த வெற்றியினை கொண்டாடும் முகமாக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கோத்தபாய ராஜபக்ஸ தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.