கேன் வில்லியம்சிற்கு 03வது முறையாக Sir Richard Hadlee விருது.. (PHOTOS)

(FASTNEWS | COLOMBO) – நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவரான கேன் வில்லியம்சன் (Kane Williamson), 03வது முறையாக ‘சர் ரிச்சர்ட் ஹாட்லீ’ (Sir Richard Hadlee) விருதை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

ஆண்டுதோறும் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘சர் ரிச்சர்ட் ஹாட்லீ’(Sir Richard Hadlee) என்ற விருதை கேன் வில்லியம்சன் வென்றுள்ளார்.

இதனை அவர் மூன்றாவது முறையாக பெற்றுள்ளார். எனவே, 03 முறை ‘சர் ரிச்சர்ட் ஹாட்லீ’ விருதை பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை கேன் வில்லியம்சன் பெற்றுள்ளார். இதற்கு முன்பு ராஸ் டெய்லர் இரண்டு முறை இந்த விருதை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Image result for kane williamson 'SIR RICHARD AWARD 2019

Image result for kane williamson 'SIR RICHARD AWARD 2019Image result for kane williamson 'SIR RICHARD AWARD 2019

(iFA)