விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பதமநாதன் எனப்படும் கே.பி தொடர்பில் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் ஊடாக விசாரணை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள சந்தர்ப்பத்திலே இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.பியை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு இந்த மனு மூலம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
அவருக்கு எதிரான 193 குற்றச்சாட்டுகள் தொடர்பில் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்றில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள் தொட்பில் அனைத்து மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் அறிக்கை பெற்றுக் கொண்டதாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குற்றச் சாட்டு தொடர்பில் கே.பி சந்தேக நபராக கருதி இதுவரையில் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.