கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் குறித்து அமைச்சர் றிஷாத் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்..

கடந்த ஆட்சியினை எதிர்த்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த போராடிய மக்களை இந்த அரசாங்கம் வீதிக்கு தள்ளியுள்ளது என அமைச்சர் றிசாட் பதியூதீன் குற்றம் சாட்டியுள்ளார்.

சொந்த காணிகள் மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மற்றும் நீராவிப்பிட்டிப் பகுதி மக்களை நேற்று(11) சந்தித்து கலந்துரையாடிய பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்த போராடிய சிறுபான்மை மக்களை இன்று வீதியில் நின்று போராடும் நிலைக்கு இந்த அரசாங்கம் தள்ளியுள்ளது.

அரசாங்கம் கைவிட்டாலும் கேப்பாப்பிலவு மக்களுக்கு நாம் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம். இந்த காணிகளை பெற்றுக் கொடுப்பதற்கான உச்சக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, மக்களின் மண்மீட்பு போராட்டம் குறித்து இன்று(12) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் உறுதியளித்துள்ளார்.

(rizmira)