கல்பிட்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது
கேரள கஞ்சா கடத்திய நபரொருவரை , பொலிசார் நேற்று(24) கைது செய்துள்ளனர்.
4 பொதிகளில் 8 கிலோ 281 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கஞ்சா தொகையை கடத்த பயன்படுத்தப்பட்ட பாரவூர்தியும் காவற்துறையின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
41 வயதுடைய சந்தேகநபர் நுரைச்சோலை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, , கொலன்னாவை பிரதேசத்தில் கொழும்பு குற்றவியல் பிரிவில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் 10 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
43 வயதுடைய தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்