கெஹலிய ரம்புக்வெல்ல ரணில் விக்ரமசிங்கவுடன்கலந்துரையாடல்

ஐக்கிய தேசிய கட்சியுடன் மீண்டும் இணையும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் மூன்று தடவைகள் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கலந்துரையாடியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் கபீர் ஹாசீம் இதனை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய ஒரு போதும் தயாரில்லை என தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் வெளியிட்ட அறிக்கையிலே ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர்  கபீர் ஹாசீம்  இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தோல்வியடைந்தவுடன் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்கட்சி அலுவலகத்திற்கு வந்து கட்சியின் தலைவருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர, மேலும் இரண்டு தடவைகள் அலரி மாளிகைக்கு வந்து ஐக்கிய தேசிய கட்சியில் இணைத்து கொள்ளுமாறு கோரியதாக அதன் பொது செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் எமது செய்தி பிரிவு வினவியது.

அதற்கு பதிலளித்த அவர் தாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவை சந்தித்தமையானது ரகசியம் அல்லவென குறிப்பிட்டார்.