கே.டி.லால் காந்தவை பிணையில் விடுவிக்கக் கோரி, ஜேவிபி இன்று(07) மனு…

(FASTNEWS | COLOMBO) – விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழுவின் உறுப்பினர் கே.டி.லால் காந்தவை பிணையில் விடுவிக்கக் கோரி, இன்று(07) அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் மனு ஒன்றினை முன்வைக்க தீர்மானித்துள்ளதாக பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் – புதிய புத்தளம் வீதியில் கடந்த வாரம் இடம்பெற்ற குறித்த விபத்தில் சந்தேகத்தின் பேரில் கே.டி.லால் காந்த கடந்த 01ம் திகதி கைதாகியமையும் குறிப்பிடத்தக்கது.