அமெரிக்காவிலுள்ள உணவகமொன்றின் ஊழியர் ஒருவர், கைகல் அற்ற வாடிக்கையாளர் ஒருவருக்கு உணவூட்டி பலரின் மனதை நெகிழ வைத்துள்ளார்.
22 வயதான அலெக்ஸ் ரூயிஸ் எனும் இந்த ஊழியர், ஜோர்ஜியா மாநிலத்தின் டக்ளஸ்வில்லே நகரிலுள்ள உணவு விடுதியொன்றில் பணியாற்றுகிறார்.
அண்மையில் இவர் வாடிக்கையாளர் ஒருவருக்கு உணவூட்டிக்கொண்டிருந்தபோது மற்றொரு வாடிக்கையாளர் அக் காட்சியை படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அலெக்ஸ் ரூயிஸ் உணவூட்டிய சாரதி கைகள் அற்றவர் எனவும் அவர் அந்த உணவு விடுதியின் வழக்கமான வாடிக்கையாளர்களில் ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி வாடிக்கையாளருக்கு 30 நிமிடங்களுக்கு மேலாக முழு உணவையும் தானே ஊட்டினார். இடையில் ஒரு தடவைகூட அவர் மேசையிலிருந்து எழவில்லை அவ் விடுதியில் பணியாற்றும் மற்றொரு ஊழியரான கிறிஸ்டல் பிகுவேரா எனும் பெண் தெரிவித்துள்ளார்.
இந் நடவடிக்கைக்காக அலெக்ஸ் ரூயிஸை பலரும் புகழ்ந்துள்ளனர். ஆனால், மேற்படி வாடிக்கையாளர் உணவு உண்பதற்கு உதவி கோரியதை தான் செவிமடுத்ததையடுத்து அவருக்குத் தான் உதவியாக கூறியுள்ளார். “சரியானதை நான் செய்தேன் அவ்வளவு தான்” என்கிறார் அலெக்ஸ் ரூயிஸ், பணிவுடன்.