கைகள் மற்றும் கால்களின் அழகை மேம்படுத்த இதை யூஸ் பண்ணுங்க!

கருமையை போக்க சிலருக்கு கை, கால் முட்டிகளில் கருமையான தோல்கள் இருக்கும். இது சருமத்தின் நிறத்துடன் ஒத்துப்போகாமல் காணப்படும். நீங்கள் தொடர்ந்து இந்த பகுதிகளில் எலுமிச்சப்பழ சாறை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கம் இருந்தால் ஒலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

நகங்களுக்கு:
எண்ணெய் நகங்களை வெட்டும் முன் எண்ணெய்யை தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

பாத வெடிப்பு:
பாத வெடிப்பிருந்தால் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பெடிக்யூர் செய்து கொள்ளலாம். சொரசொரப்பான கற்களை கொண்டு பாதங்களை தேய்த்து குளித்து வந்தாலோ அல்லது ஸ்கரப் பயன்படுத்தினாலோ உங்களது பாதங்களில் உள்ள இறந்த செல்கள் புதுப்பிக்கப்படும். பாதமும் மென்மையாக இருக்கும்.

பாதங்களுக்கு:
உப்பு, ஷாம்பூ, எலுமிச்சம் பழச்சாறு கலந்த வெந்நீரில் கால்களை ஊற வைத்துக் கழுவலாம். இதனால் பாதங்கள் சுத்தமாக இருக்கும். பாதங்களில் உள்ள அழுக்குகள் மற்றும் நகங்களை சுத்தமாகும். கால்களுக்கு இதமாகவும் இருக்கும்.

மென்மையாக இருக்க வேண்டுமா?
கைகள் மற்றும் கால்கள் மென்மையாக இருப்பது தான் அழகு.. ஆனால் சிலருக்கு கைகள் மற்றும் கால்கள் கடின தன்மையுடன் காணப்படும். ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளிலும் கால்களிலும் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், உள்ளங்கைகள் மற்றும் கால்களில் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்

நகம் வெட்டுவதற்கு முன்பு:
நகங்களை வெட்டுவதற்கு முன்னால் நகங்களை மிதமான சூடுள்ள நீரில் சிறிது நேரம் ஊற வைத்து வெட்டுவதனால் மிகவும் எளிமையாக நகங்களை வெட்டலாம். அல்லது தேங்காய் எண்ணெய்யை தடவி மசாஜ் செய்து வெட்டினாலும், எளிமையாகவும், பிடித்த வடிவத்திலும் நகங்களை வெட்டலாம்.

நகம் உடைகிறதா?
நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும். மேலும் சிறிது நேரம் பூண்டில் நகங்களை ஊற வைப்பதாலும் நகங்கள் உடைவதை தடுக்கலாம்.

நகங்கள் பளபளக்க:
கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதே போல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். மாத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.