கைதுகள் தொடர்ந்தாலும் எதிர்ப்புப் போராட்டங்களில் மாற்றம் இல்லை – லஹிரு…

மாணவ தலைவர்கள் கைது செய்யப்பட்டாலும், மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் தொடரும் என அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவ செயற்பாட்டாளர் ரயன் ஜெயலத் நேற்று(18) நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் அவரை பொலிஸார் கைது செய்து தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து கொழும்பில் இன்று(19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ரயன் ஜெயலத் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார். இவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த இந்நிலையில் அவர் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)