கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் நுவான் குலசேகர பிணையில் விடுதலை (Update)

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான நுவான் குலசேகர பிணையில் விடுதலையாகியுள்ளார்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான நுவான் குலசேகர, கடுவலையில் ஏற்பட்ட விபத்து சம்பவமொன்றில் சந்தேகத்தின்பேரில் நேற்றைதினம்(19) கைது செய்யப்பட்டார்.

அவர் செலுத்திய கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலியாகியுள்ளார்.

கண்டி -கொழும்பு பிரதான வீதியில் கடுவலை ரன்முத்துகல பிரதேசத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு நோக்கி பயணித்த 28 வயதுடைய இளைஞனே பலியாகியுள்ளதுடன் நுவான் குலசேகரவும் கொழும்பு நோக்கி பயணித்தபோதே அந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

14389871_1517500008261974_1827692729_n

14397881_1517500981595210_2012630660_n

14407789_1517499504928691_1331699977_n