மட்டக்களப்பு நீதிமன்றத்தினுள் கையடக்க தொலைபேசியினால் புகைப்படம் எடுத்த காத்தான்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்திற்குள் நேற்று முன்தினம் காத்தான்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது கையடக்க தொலைபேசியினால் புகைப்படம் எடுத்துள்ளார்.
இதை அவதானித்த நீதிமன்ற பொலிஸார் குறித்த நபரை கைது செய்ததுடன் நீதிமன்றம் முடியும் வரைக்கும் நீதிமன்ற சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டதுடன் அவருக்கு ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
அத்தோடு அவரின் கையடக்க தொலைபேசியில் இருந்த சிம்மும் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அபராத தொகையை செலுத்திய பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவுற்ற நேரத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.