கொக்காகோல உற்பத்தியின் பிரதான மத்திய நிலையமாக இலங்கையை மாற்றி அமைக்கவுள்ளதாக நிறுவனத்தின் ஆசிய பசுபிக் வலயத்திற்கான தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
நிறுவனத்தின் ஆசிய பசுபிக் வலயத்திற்கான தலைவர்கள் கொழும்பில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளனர்.
கொக்காகோலாவிற்கு கூடுதல் கேள்வி நிலவும் இந்தியாவிற்கு கூடுதலான உற்பத்திகளை இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
இதன் மூலம் இலங்கைக்கு கூடுதலான அன்னியச் செலாவணியை ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.