முல்லைத்தீவு கோகிலாய் முகத்துவார பகுதியில் அமைந்துள்ள சிங்கள மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தால், 08 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே குறித்த இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியால் 06 மாணவிகள் மற்றும் 02 மாணவர்கள் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எதுஎவ்வாறு இருப்பினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொக்கிலாய் பொலிஸ் நிலைய குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, மீன் பிடிக்கப் பயன்படுத்தும் ஜெனட்நைட் ஜெல் எனப்படும் வெடி மருந்து காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கொக்கிலாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.