கொக்கேன் பயன்படுத்தும் அமைச்சரவை அமைச்சர்கள்…

கொக்கேன் பயன்படுத்தும் அமைச்சரவை அமைச்சர்கள் இருக்கின்றார்களென, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைக்கப்பட்டு வரும் கண்டி- குருநாகல் அதிவேக நெடுஞ்சாலை கண்காணிப்பு விஜயத்தை நேற்று(11) மேற்கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மாகந்துரே மதூஷை கைது செய்த விடயத்தில் பூரண பொறுப்பு பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரி லத்தீப்பை​யும், அதற்கான கௌரவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சாரும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் போதைப் பொருள் வர்த்தகர்கள் தனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்த அவர், போதைப் பொருளுக்காக செயற்படும் கலைஞர்களுடன் தனக்கு கொடுக்கல் வாங்கல் இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.

எனினும் பல அரசியல்வாதிகளுக்கு மதுஷுடன் தொடர்புள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.