கொடகனந்த இரட்டைக் கொலை வழக்கில் பிணை மறுப்பு

கஹவத்தை, கொடகனந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பில் மூன்று வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொக்குகமகே ஹேவாகே தர்ஷன என்றழைக்கப்படும் ராஜூ மற்றும் அவருடைய மனைவியான ரஷிகா சாந்தனி உதயகுமாரி என்றழைக்கப்படும் அசோகா ஆகிய இருவருக்கும் பிணைவழங்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிராகரித்துள்ளது.

அவ்விருவருக்கும் எதிரான வழக்கை ஜூரி சபையின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்விருவருக்கும் பிணை வழங்குவதா இல்லாயா என்பது தொடர்பில் ஜூலை 6ஆம் திகதி  தீர்மானிக்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன ஜூன் 29ஆம் திகதி அறிவித்திருந்தார்.

கொடகனந்த நயனா நில்மினி( வயது 52) காவிந்தியா சந்துரங்கி (வயது 17) ஆகியோர் கொலை தொடர்பிலேயே இவ்விருவரும் கடந்த 3 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்விருவருக்கும் 8 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட 5 குழந்தைகள் இருப்பதாகவும் அவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு அவ்விருவருக்கும் பிணை வழங்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் அன்று கோரிநின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

(riz)