கொடகம – ஹம்பாந்தோட்டை அதிவேக வீதி 2019 இல் பூர்த்தி..

ஊவா கிழக்கு மற்றும் வடமாகாண வீதி அபிவிருத்தி பணிகள் இவ்வருடத்தில் ஆரம்பிக்கப்படும் என்று உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டின் இறுதியில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை கொடகமவில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான நிர்மாணப்பணிகள் பூர்த்திசெய்யப்பட்டு பொதுமக்களிடம் பாவனைக்காக ஒப்படைக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு சுற்றுவட்ட வீதியில் 3ம் கட்ட பணிகள் 2019ம் ஆண்டு பூர்த்திசெய்யப்படவுள்ளது.

ஒன்றிணைந்த வீதித்திட்டத்தின் கீழ் மாகாணம் மற்றும் கிராமிய வீதிகளில் 3130 கிலோமீற்றர் நீளமான வீதியும் தேசிய கட்டமைப்பில் 400 கிலோமீற்றர் நீளமான வீதியும் புனரமைப்பு செய்யப்படவுள்ளது என்றும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.