திம்புள்ள பத்தன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள் உட்பட ஏனைய உத்தியோகத்தர்கள் இன்று(17) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக கொட்டகலை பிரதேச வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று(16) இரவு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஆதரவாளர்களான மலர்வாசகம் உட்பட ஏனைய ஆதரவாளர்கள் கொட்டகைலை வைத்தியசாலையின் வைத்திர்களை தகாத வார்த்தையில் பேசியதாகவும் அவர்களை தாக்க முயற்சிதுள்ளதாக கொட்டகலை வைத்தியசாலையின் வைத்தியர்கள் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்று பதிவு செய்யபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டகலை வைத்தியசாலையின் வைத்தியர்களின் சேவைக்கு இடையூரு விளைவித்ததாகவும் அவர்களை தகாத வார்த்தையில் பேசியதாகவும், அவர்களை தாக்க முயற்சித்த குற்றச்சாட்டுக்கமைய இ. தொ.கா.வின் ஆதரவாளர் ஒருவரை திம்புள்ள பத்தைனை பொலிஸாரால் கைது செய்துள்ளதுடன் ஏனைய ஆதரவாளர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது