கொட்டதெனியாவ பெண் கொலைச் சம்பவத்தின் சந்தேகநபர் கைது..

கொட்டதெனியாவ பிரதேசத்தில் பெண்ணொருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு, வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 12ம் திகதி கொட்டதெனியாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து 68 வயதுடைய பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்த வீட்டிற்கு வேலைக்கு வந்திருந்த ஊழியர் ஒருவரை கைது செய்து விசாரித்த போது அவரால் இந்த கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

அதன்படி குறித்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க மாலையை கொள்ளையிடுவதற்காக அந்தப் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.

(rizmira)