(FASTNEWS|COLOMBO) – நீர்க்குழாய் பொருத்தும் நடவடிக்கை காரணமாக, கொட்டாஞ்சேனை, சிறில் சீ பெரேரா மாவத்தையின் வாசல வீதி சந்தியிலிருந்து வோல்ஸ் ஒழுங்கை சந்தி வரையான பாதை 03 நாட்களுக்கு பிரதி வெள்ளிக்கிழமை தோறும் போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 02, 09, 16 ஆம் திகதிகளில்(வெள்ளிக்கிழமை) இரவு 9.00 மணி முதல் திங்கட்கிழமை(05, 12, 19 ஆம் திகதிகளில்) அதிகாலை 5.00 மணி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தினங்களில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வாகனச் சாரதிகள் மற்றும் பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.