கொட்டாஞ்சேனை, அளுத் மாவத்தையில் ஹெட்டியாவத்தை சந்தியில் இருந்து இப்பாகாவத்தை சந்தி வரையான இராமநாதன் மாவத்தை இன்று(11) இரவு 09.00 மணி முதல் எதிர்வரும் 14ம் திகதி காலை 05.00 மணி வரை வாகனப் போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இந்த வீதியின் ஒரு பகுதியில் புதிதாக குடிநீர் குழாய் பொறுத்தும் நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருப்பதால் இவ்வாறு வாகனப் போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த வீதியால் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் அந்தக் காலத்தில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.