கொட்டாஞ்சேனை பகுதியில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள வீதிப்போக்குவரத்து…

நாளை(19) இரவு 9 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை(22) அதிகாலை 5 மணி வரை கொட்டாஞ்சேனை முதல் இப்பாவத்தை வரையிலான இராமநாதன் வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள நிலகீழ் நீர்குழாய்களில் காணப்படும் திருத்த பணிகள் காரணமாகவே இந்த வீதி தற்காலிமாக மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து செல்லும் வாகனங்கள் ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தை வழியாக புளுமெண்டல் வழியாக மாதம்பிட்டி சென்று ஜேம்ஸ் வீதியை சென்றடைய முடியும் என்பதோடு, முகத்துவாரத்திலிருந்து கோட்டை நோக்கி செல்லும் வாகனங்களும் மேற்குறிப்பிட்ட வீதியினை இருவழி போக்குவரத்தாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.