கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் தீ விபத்து…

கொழும்பு – கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வுகூடத்தில் இன்று(24) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், 8 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் குறித்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.