கொத்மலை நீர்த்தேக்க வீதிக்கு இன்று முதல் தற்காலிகப் பூட்டு….

கொத்மலை நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டிற்கு மேல் வாகனங்கள் பயணம் செய்வது இன்று முதல் 3 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக நீர்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

அணைகட்டில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியவசிய பராமரிப்பு வேலை காரணமாக குறித்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதனால் அணைகட்டின் மேல் பயணம் செய்வது மட்டுமல்லமால் நீர்த்தேக்கத்தை பார்வையிட வருவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

#rishma