கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் பணியாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நள்ளிரவில் தாக்கப்பட்டிருந்தனர்
இந்த தாக்குதல் சம்பவத்துடன் ஜனாதிபதியின் மகன் தஹாம் சிறிசேனவிற்கும், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கும் தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும் சீ.சீ.ரீ.வி கமராகவில் பதிவாகியிருந்த 90 செக்கன் வீடியோ காட்சி தெளிவற்றதாக காணப்படுகின்றது என மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நிறுவன உரிமையாளர், முகாமையாளர் மற்றும் தாக்குதலுக்கு இலக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் ஏற்கனவே வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -வெல்லம்பிட்டிய பகுதியில் கைக்குண்டு மற்றும் துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலன்னாவை பகுதியை சேர்ந்த 25 மற்றும் 31 வயதான இரண்டு…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலையில்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு எதிர்வரும் 16ம் திகதி மேலும் 1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப் பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.