இலங்கையிலிருந்து தென் கொரியாவிற்கு தொழில் நிமித்தம் செல்வோரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் அந்நாட்டு வௌிவிவகார அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்வாறு இணக்கம் காணப்பட்டுள்ளது.
அந்நாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கான வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்கு தென்கொரியா இதன்போது இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது 42,000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் தென்கொரியாவில் தொழில் செய்து வருகின்றனர்.
இந்த தொழிலாளர்கள் இரண்டு நாடுகளினதும் பொருளாதாரத்திற்கு சக்தியாக அமைந்திருப்பதாகவும் அந்நாட்டு வௌிவிவகார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
(riz)