கொரிய மொழி நிபுணத்துவ பரீட்சைக்கான விண்ணப்பங்கள்…

(FASTNEWS|COLOMBO) கொரிய மொழி நிபுணத்துவ பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 18 மத்திய நிலையங்கள் ஊடாக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. முதலாவது தினத்தில் மாத்திரம் சுமார் 5000 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றன.

உற்பத்தி, நிர்மாணத்துறை, கடற்றொழில் போன்ற தொழில்களுக்காக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றதுடன், விண்ணப்பங்கள் நாளை வரை விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.