(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட முதலாவது கடற்படை வீரர் முழுமையாக குணமடைந்துள்ளார்.
அதன்படி தற்போது வரை 187 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, இதுவரை 718 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 524 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.