(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –நோயான கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இத்தாலியிலுள்ள இலங்கையர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதிப்புக்குள்ளான இலங்கை பெண் ஊடகவியளர்களுடன் விடியோ மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், தான் வேலை செய்த வீட்டின் உரிமையாளருக்கு கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
தற்போது தனக்கு தலைவலி மற்றும் காய்ச்சல் இருப்பதாகவும் வைத்தியாசாலை அனுமதிக்கப்பட்டு வலி நிவாரணி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதுவரையில் தனக்கு ஒரு முறை மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர் நேற்றிலிருந்து தனக்கு எந்த உணவும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.