கொரோனா இது வெறும் முதல் அலையே – WHO எச்சரிக்கை 

(ஃபாஸ்ட் நியூஸ் |  ஜெனீவா) – உலக நாடுகள் தற்போது எதிர்கொண்டிருப்பது கொவிட்-19 எனும் கொரோனாவின் முதல் அலையே, இனி மிகப் பெரிய அலை வரும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் அதிகாரியான மார்க்ரெட் ஹாரிஸ் (Margaret Harris) ஜெனிவாவில் ஊடக சந்திப்பில் தெரிவிக்கையில்;

“… உலக நாடுகள் அனைத்தும் முதல் கட்ட கொரோனா அலையில்தான் உள்ளோம். இன்னொரு மிகப் பெரிய அலையாக இது மாற்றம் அடையும். கொரோனா பாதிப்பு என்பது மேலும் அதிகரிக்கும். இது ஒன்றும் சீசன் கால தொற்றுநோய் அல்ல. அமெரிக்காவின் கோடை காலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.

கொரோனா வைரஸ் என்பதை அனைத்து காலநிலைகளையும் எதிர்கொள்ளக் கூடியதாக இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம்…” எனத் தெரிவித்துள்ளார்.