கொரோனா : ஐஎஸ் அமைப்பினால் விசேட அறிவுறுத்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | ஈராக்) – உலகளவில் ஆட்டிப்படைக்கும் உயிர் அச்சுறுத்தல்மிக்க கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஐஎஸ் (ISIS) அமைப்பு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளதனை குறித்த அமைப்பின் செய்திப் பத்திரிகையான அல்-நபா செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த வைரஸ் தொடர்பில் முன்னெச்செரிக்கையாக இருக்குமாறும் கொரோனா வைரஸை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும் குறித்த அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பயண தடை, கைகளை கழுவுதல் மற்றும் ‘கடவுள் மீது உங்கள் நம்பிக்கையை வைப்பது’ என்பது தொடர்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐஎஸ் அமைப்பின் தலைமையகமான ஈராக்கில் இதுவரை 101 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த அறிவுறுத்தல் பிரசுரங்கள் :

 The list of instructions was published in the organisation's newsletter

 Iranian Firefighters disinfect streets in an effort to stop the wild spread of coronavirus in Tehran, Iran

 Iraq working to prevent coronavirus contagion

 ISIS members have been told to "put their faith in God" Members of the Iraqi civil defence spray disinfectant as a precaution in Iraq