கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

றாகமை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

றாகமை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றிகுள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

—————————————————-[UPDATE 05.14 PM]

கொரோனா தொற்றினால் மேலும் 04 மரணங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வடைந்துள்ளது.