கொரோனா வைரஸுக்கு தீர்வு என்ன தெரியுமா? உங்கள் வீட்டிலும் உள்ளது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா வைரஸை தக்கத்தை குறைக்க வெங்காய சாப்பிடுமாறு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இந்தியா காரைக்குடியில் அமைந்துள்ள பிரபல உணவகத்தில் “கொரோனா வைரஸ் வராமல் தடுக்க சின்ன வெங்காய ஊத்தப்பம் சாப்பிடுங்கள்” என்று போர்டு ஒன்றை வைத்துள்ளார்.

மேலும், இது குறித்து அந்த ஹோட்டல் உரிமையாளர் கூறியதாவது, “எங்களது ஹோட்டல் 65 ஆண்டுகாலம் பாரம்பரியம் உடையது. சின்ன வெங்காயம் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி மருந்தாகும். சின்ன வெங்காயம் மற்றும் நல்லண்ணெய் ஆகியவை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.

ஆனால், தற்போதைய தலைமுறையினருக்கு சின்ன வெங்காயத்தின் அருமை தெரியவில்லை. இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவே இப்படி ஒரு போர்டு வைத்தோம். சின்ன வெங்காயம் அதிகம் சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால், எந்த வைரஸும் தாக்காது” என்று தெரிவித்துள்ளார்.

சின்ன வெங்கயத்தில் சிறப்புகளை பார்க்கின்ற போது இரத்தக்கொதிப்பு, நெஞ்சு படபடப்பு,தும்மல் ஆகியவற்றுக்கு ஒரு சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் இவை குணமடையும். இவ்வாறான பல நோய்களுக்கு தீர்வாக இருக்ககூடிய இந்த சின்ன வெங்காயம் தற்போது  கொரோனா வைரஸுக்கும் தீர்வு என்கின்றனர்.