கொரோனா வைரஸ் குறித்து விராட்

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட அனைத்து மக்களும் மனதளவில் வலுவாகவும், பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் இருங்கள் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளிலும் நடைபெற இருந்த சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி உள்ளூர் போட்டிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் எதிர்வரும் 29 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்த 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் ஒருநாள் போட்டி தொடரும் பாதியில் இரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி தனது டுவிட்டர் பதிவில், ‘அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட அனைத்து மக்களும் மனதளவில் வலுவாக இருக்க வேண்டும். பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் இருங்கள். வந்த பிறகு குணப்படுத்துவதை விட வரும் முன் காப்பதே சிறந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தயவு செய்து எல்லோரும் கவனமாக இருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.