கொரோனா வைரஸ் – பலி எண்ணிக்கை உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றால் சீனாவில் இதுவரை 77,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2,600 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவுக்கு வெளியே சுமார் 30 நாடுகளில் 1200 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 20 பேர் அதற்கு பலியாகியுள்ளனர்.

இத்தாலியில் திங்களன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால் உலக பங்குத் சந்தையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.