ஐ.பி.எல். தொடரிலிருந்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் கமலேஷ் நாகர்கோடி, விலகியுள்ளார்.
காலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் இத்தொடரிலிருந்து விலகியுள்ளதாக, அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இதேவேளை அவருக்கான மாற்று வீரரை தேர்வு செய்வதிலும் தாம் தீவிர அவதானம் செலுத்தி வருவதாக, அணி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கமலேஷ் நாகர்கோடியை, கொல்கத்தா அணி நிர்வாகம் இந்திய மதிப்பில், 3.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Rishma