கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு அபார வெற்றி…

இந்தியன் ப்ரீமியர் லீக்கின் நேற்று(15) இடம்பெற்ற 49 வது போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸை அணியை, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 06 விக்கட்டுக்களால் வெற்றி கொண்டது.

கொல்கத்தாவில் நேற்றிரவு இடம்பெற்ற குறித்த இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதையடுத்து, முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, 19 ஓவர்களில் 142 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

பின்னர் 143 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 18 ஓவர்களின் 4 விக்கட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.