கொல்கத்தா ரயில் விபத்தில் ஒன்பது பேர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – கொல்கத்தாவில் அடுக்குமாடிக் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நான்கு தீயணைப்பு வீரர்கள், இரண்டு ரயில்வே ஊழியர்களும் மற்றும் ஒரு கொல்கத்தா பொலிஸ் அதிகாரி ஆகியோரும் உயிரிழந்தவர்களில் அடங்குவதாக மேற்கு வங்க தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் அமைச்சர் சுஜித் போஸ் உறுதிப்படுத்தினார்.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஸ்ட்ராண்ட் வீதியில் அமைந்துள்ள 13 மாடிகளைக் கொண்ட கிழக்கு ரயில்வே அலுவலக கட்டிடத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டது.

விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“கொல்கத்தா ரயில் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். ரயில்வே ஊழியர்கள், பொது மேலாளர் சம்பவ இடத்தில் உளனர். மாநில அரசுடன் மீட்பு, நிவாரணப் பணியில் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். ரயில்வே வாரியத்தின் 4 முக்கிய தலைமை அதிகாரிகள் அடங்கிய குழு சார்பில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனப் பதிவிட்டிருந்தார்.