கொள்ளுப்பிட்டி ரயில் நிலைய அருகாமையில் ஆணின் சடலம் மீட்பு (video)

கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்பரப்பில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரை அடையாளம் காணவும் மரணத்திற்கான காரணத்தை கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=jecs32m-nD8&feature=youtu.be” width=”560″ height=”315″]

(riz)