கொழும்பு கோட்டை மற்றும் சில புறநகர் பகுதிகளை இணைக்கும் மேம்பாலங்கள் சிலவற்றை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு இணைந்து இதற்கான பணிகளை இந்த வருடம் ஆரம்பிக்க உள்ளன.
இன்னும், கொழும்பு கோட்டை மற்றும் அத்துருகிரிய இடையிலான முதலாவது அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட உள்ளது.
21 கிலோ மீற்றர் நீளமான இந்த வீதி கொழும்பு கோட்டை, ஒருகொடவத்தை, தொட்டகொட, ராஜகிரிய, பத்தரமுல்லை, மாலபே, அத்துருகிரிய ஆகிய பிரதேசங்கள் ஊடாக அமைக்கப்பட உள்ளது.
இதனை தவிர அத்துருகிரிய மற்றும் கட்டுநாயக்கவை இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலையும் நிர்மாணிக்கப்பட உள்ளது. இந்த அபிவிருத்தி பணிகளுக்கான செலவு 130 பில்லியன் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.