கொழும்பின் சில பகுதிகளில், இன்று(13) 21 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு…

அவசர திருத்தப்பணிகள் காரணமாக, கொழும்பின் சில பகுதிகளில், இன்று(13) காலை 8 மணிமுதல் நாளை மாலை 5 மணிவரை 21 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிட்டிய மற்றும் ருக்மல்கம உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதுடன், பெலேன்வத்த, மத்தேகொட, ​ஹோமாகம, மீபே மற்றும் பாதுக்க உள்ளிட்ட இடங்களுக்கு நீர்வெட்டு இடம்பெறும்