கொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று(20) இரவு 9.00 மணி முதல் 09 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
களனி பாலத்தில் இருந்து தெமட்டகொட வரையான பேஸ்லைன் வீதி பகுதி மற்றும் புறக்கோட்டையின் கடற்கரை வீதி மற்றும் கொழும்பு 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.