கொழும்பின் பல பகுதிகளில் நாளை மறுதினம்(05) இரவு முதல் 8 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
பேஸ்லைன் வீதியின் களனி பாலத்துக்கு அருகில் இருந்து தெமட்டகொடை சந்தி வரையான பிரதான பாதை மற்றும் சகல உள்ளக வீதிகள், ஹெட்டி வீதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், கொழும்பு 13, 14,15 ஆகிய பிரதேசங்களில் நீர்வெட்டு அமுலில் இருக்கும்.
சனிக்கிழமை இரவு 9 மணிமுதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிவரையான 8 மணித்தியாலங்களுக்கு இந்த பிரதேசங்களுக்கான நீர்விநியோகம் துண்டிக்கப்பட்டிருக்கும்.