கொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை நீர் விநியோகம் தடை

கொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை நண்பகல் 12 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நீர் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ளது.
இதற்கமைய, மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிட்டிய, ஹோமாகம, ருக்மல்கம, பெலன்வத்த, மத்தேகொட, கொடகம, மீபே, ஹங்வெல்ல, களுஅக்கல மற்றும் பாதுக்க ஆகிய பிரதேசங்களில் இந்த நீர் விநியோக தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.