கொழும்பின் பெரும்பாலான பகுதிகளில், நாளை நீர் விநியோக தடை…

நாளை(04) காலை 9.00 மணி முதல் கொழும்பின் பெரும்பாலான பகுதிகளில், 18 மணி நேர நீர் விநியோக தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதன்படி, கொஸ்கஸ் சந்தி, கிராண்ட்பாஸ், மஹாவத்த, தொட்லங்க, பேஸ்லைன் வீதி, மற்றும் களனி பாலத்திற்கு அருகில் இருந்து தெமட்டகொட சந்தி வரையான பிரதான வீதிகளில் உள்ள பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
து.

 

(rizmira)