(FASTNEWS|COLOMBO) – கொழும்பு நகர அபிவிருத்தி திட்டம் காரணமாக கொழும்பில் பல பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி குறித்த காலப்பகுதியில் கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்ஸை, கோட்டே மற்றும் கடுவலை மாகநகர சபைகளின் அதிகார பகுதிகள், மஹரகமை, பொரலஸ்கமுவ நகர சபையின் அதிகார பிரதேசங்கள், கொட்டிகாவத்தை, முல்லேரியாவ பிரதேச சபையின் அதிகார பகுதிகள், ரத்மலானை மற்றும் சொய்சாபுர அடுக்குமாடி பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.