கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பூட்டு..

கொலம்பஸ் தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இன்று(09) மூடப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

1492ஆம் ஆண்டு ஒக்டோபர் 12ஆம் திகதி கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவில் தரையிரங்கி, அமெரிக்காவை கண்டுபிடித்தார். இதனை முன்னிட்டு குறித்த தினம் கொலம்பஸ் தினமாக அமெரிக்கர்களால் கொண்டாடப்படுகிறது.

கொலம்பஸ் தினம் ஒக்டோபர் 12ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதும், ஒக்டோபர் மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமை குறித்த தினம் கொண்டாடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)