கொழும்பில் இன்று போக்குவரத்து மட்டு…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடொடோ இன்று(24) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார்.

இந்தப் பயணத்தின்போது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் இந்தோனேசிய பிரதமர் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும், இரண்டு நாடுகளுக்குமிடையே புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ ஸியான் இன்று தமது பயணத்தை நிறைவு செய்யவுள்ளார்.

இரண்டு நாடுகளின் அரச தலைவர்களின் பயணங்களை முன்னிட்டு, கட்டுநாயக்க அதிவேக வீதி உள்ளிட்ட கொழும்பின் சில வீதிகளின் போக்குவரத்து இன்று(24) மட்டுப்படுத்தப்படும் என பொலிசார் அறிவித்துள்ளனர்.

முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 2 மணி வரையான காலப்பகுதியினுள் இந்த போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசிய பிரதமரின் இலங்கை பயணம் முற்பகல் 11.30 முதல், 1 மணிவரை அமையவுள்ளது.

இதனை முன்னிட்டு, கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பேலியகொடை, பண்டாரநாயக்க மாவத்தை, ஒருகொடவத்தை, தெமட்டகொட, பொறளை, டீ.எஸ்.சந்தி, க்ரீன் பார்க், தாமரை தடாக சந்தி, நூலக சுற்றுவட்டம், லிப்டன் சுற்றுவட்டம் ஊடாக புனித மைக்கல் வீதி ஊடாக காலி வீதிவரை இந்த போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பிற்பகல் ஒரு மணிமுதல் 2 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் சிங்கப்பூர் பிரதமர் தமது இலங்கை பயணத்தை நிறைவு செய்து நாட்டிலிருந்து புறப்படவுள்ளார்.

இதனை முன்னிட்டு குறித்த காலப்பகுதியில்இ காலி வீதி முதல், கொள்ளுப்பிட்டி சந்தி, பித்தளை சந்தி, நூலக சுற்றுவட்டம், தாமரை தடாகம்இ க்ரீன் பார்க், டீ.எஸ்.சந்தி, பொறளை, தெமட்டகொடை, ஒருகொடவத்தை, பண்டாரநாயக்க சுற்றுவட்டம், பேலியகொடை ஊடாக அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுநாயக்க விமான நிலையம்வரை இந்தப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதக குறிப்பிடப்பட்டுள்ளது.